Tuesday, 21 February 2012

சித்த வைத்தியத்தில் பாஷாணம், இரசவாதம் பற்றிய உண்மை விளக்கம் - 02



நேற்றைய பதிவில் இரசத்தின் தன்மைகள் பற்றி பார்த்தோம் இன்றைய பதிவில் பூரம் எனப்படும் பஞ்சசூதங்களில் ஒன்றைப்பற்றி பார்ப்போம். இது Mercury(I) chloride எனப்படும் பதார்த்தமாகும். இதன் இரசாயன தன்மைபற்றி தற்கால விஞ்ஞானம் இவ்வாறு கூறுகிறது. 

Mercury(I) chloride is the chemical compound with the formula Hg2Cl2. Also known as calomel (a mineral form, rarely found in nature) or mercurous chloride, this dense white or yellowish-white,

இதுவும் இரசம் கலந்திருப்பதால் இரசத்திற்குரிய ஆரோக்கிய பாதிப்புகள் கட்டாயம் காணப்படும். இதுபோல் வெள்ளைப்பாஷாணம் என்பது Arsenic எனும் கொடிய விஷம் கலந்தது. 

சரி விடயத்திற்கு வருவோம். இன்றைய சித்த வைத்தியர்கள், சித்தர்கள் எனக்கூறிக்கொள்பவர்கள் என்ன செய்கிறார்கள், தங்களுக்கு சித்தர்களது அருளும் ஆசியும் உண்டு எனவும் அதன் மூலம் நவபாஷாணக்கட்டு, இரசமணி செய்துள்ளதாகவும் கூறுகிறார்கள். இதனை யாரும் பகுத்தறிவுடன் உற்றுப்பார்ப்பதில்லை. ஏனெனில் சித்தர்கள் என்றால் சபிப்பார்கள் என்ற பெரும் பயமும் மாயையும் ஆட்கொண்டுள்ளனர். இவ்வாறு சித்தர்களது பாடல்கள் சிலவற்றை எடுத்துக்கூறி கேள்வி கேட்டால் சித்தர்கள் சாபத்திற்கு ஆளாக வேண்டும் என்ற பெரும் பயத்தினை உண்டு பண்ணி மக்களை நம்பவைத்து விடுகிறார்கள். 

அப்படியானால் சித்தர்களது நவபாஷாணக்கட்டு, இரசமணியெல்லாம் பொய்யா? என்ற கேள்விக்கு ஆம் இல்லை என்ற இரண்டு பதில்களும் உண்டு. எப்படியெனில் சித்தர் நூற்களை கற்றுவிட்டும் இதுதான் முறை என்பவர்களுக்கு இல்லை என்பதுதான் பதில், ஏனெனில் அவை அனைத்தும் பரிபாஷை - குழூ உக்குறீ, நேர் பொருள் எடுத்தால் ஆபத்து. 

முக்கியமான விடயம் என்னவெனில் சித்தர்கள் ஒருமனிதன் முதலில் ஞானத்தினை பெறுவதற்குரிய சாதனையில் தன்னை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதனை வலியுறித்தியுள்ளார்கள், அதன் பின்பு தான் வாதம் வைத்தியம் எல்லாம் சித்திக்கும். ஆனால் இன்றோ வாதம் வைத்தியம் என்பவற்றை மாத்திரமே கற்க்க ஆவலுடன் இருக்கிறார்களேயொழிய யாரும் ஞானத்தினை பெறுவதற்கான யோகசாதனையில் ஈடுபடுவதில்லை. இவ்வாறு யோகசாதனையில் ஈடுபட்டு தம் பரிணாமத்தினை உயர்த்திக்கொள்ள இவற்றின் உண்மையெல்லாம் விளங்கும். 

ஆகவே வாசகர்களே நவபாஷாணம், இரசமணி, முப்பு என மனதினைச்செலுத்தி அழியாமல் யோகசாதனையினால் உங்கள் பரிணாமத்தினை உயர்த்தி பராசக்தியினை நெருங்க குருவருள் வேண்டுவேமாக!

1 comment: