கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை பகுதி -07
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்
- கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை பகுதி -01
- கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை பகுதி -02
- கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை பகுதி -03
- கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை பகுதி -04
- கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை பகுதி -05
- கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை பகுதி -06
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஓம் ஸ்ரீ கோரக்க நாத ஸ்ரீ குரு பாதம் பூஜயாமி தர்ப்பயாமி நமஹ!
முக்கிய குறிப்பு: இந்த
பதிவு மொழிபெயர்ப்பு மாத்திரம்தான், இதன் பொருள் மறைபொருளாக
விளக்கப்பட்டுள்ளது, படிப்பவர்கள் குருவருள் கொண்டு விளங்க முயற்சித்தால்
பொருளறியலாம். இவற்றில் உள்ள விடயங்களை குண்டலினி யோகம், ஸ்ரீ சக்ர பூஜை
விதிகளுடன் பொருந்திப்பார்த்து பயன்பெறலாம். ஆதலால் இது அனைவருக்குமான
பதிவு அல்ல என்பதனையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த
மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு மாத்திரமே உரியது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
58. கோரக்கர்: எந்த சக்கரத்தில் சந்திரன் உறைகிறாப்?
எந்த சக்கரத்தில் இணைவு சாத்தியம்? எந்த சக்கரம் பிராணனை கட்டுபடுத்துகிறது? எந்த சக்கரம்
மனதிற்கு அறிவைக்கொடுக்கிறது? எந்த சக்கரத்தில் தியானிக்க வேண்டும்? எந்த சக்கரம் ஒய்வில்
இருக்க வேண்டும்?
59. மச்சேந்திர நாதர்: ஊர்த்துவ
(மேலேயுள்ள) சக்கரம், அர்த்த (கீழேயுள்ள) சக்கரம், பஸ்சிமா (உடலின் பின்புறமுள்ள) சக்கரம் (Pashchima
Namaskarasana தினை அறிந்தால் தெரியும்) ஹ்ருதய சக்கரத்தில், தொண்டை சக்கரத்தில்,
ஆக்ஞா சக்கரம்
60. கோரக்கர்: எது தோட்டம்? எது நகரம்? எது மண்டலம்?
எது குருவினுடைய நகரம்? இது இருக்குமிடத்தினை நான் மறந்தால் எப்படி நான் கடப்பது?
61. மச்சேந்திர நாதர்: யார் பேச்சினை விடுத்து பலதாக உருமாறும் சூன்யத்தினை அடைகிறார்களோ,
அதில் லயித்து இருக்கிறார்களோ, யார் நல்லது கெட்டது ஆகிய இருமைகளை விட்டிருக்கிறார்களோ,
சிவனையும் சக்தியையும் உணர்ந்தவர்களோ, அவன் ஆன்ம ஆனந்தம் எனும் இவற்றை
அடைவான்.
62. கோரக்கர்: எந்த தாமரைத்தண்டினூடாக சிவத்தினை
உறிஞ்சலாம், அதை எப்படி ஜீவன் குடிப்பது? ஒருவன் எப்படி தாயின் கருவில் இருந்து அமிர்தத்தினை
அருந்துவது?
63. மச்சேந்திர நாதர்: அது சங்கினி
நாடியினூடாக சேகரிக்கப்படுகிறது, ஜீவன் சுழுமுனையினூடாக அருந்தலாம், தாயின் கருவில்
இருக்கும் போது அவன் பங்க நாளத்தின் மூலம் அருந்துகிறான்.
64. கோரக்கர்:: எது வீடு/
எது இருப்பிடம்? அன்ன காரணத்திற்காக ஒருவன் பத்து மாதம் தாயின் கருவில் இருக்கிறான்?
எந்த வாயால் நீரை அருந்துகிறான்? எந்த வாயால் பாலை அருந்துகிறான்? எந்த திசையில் உடல்
பிறக்கிறது?
65. மச்சேந்திர நாதர்: தூய்மையான, வடிவமற்றதுவே இருப்பிடம்,
நிபந்தனையற்றது எதுவோ அதுவே இருப்பிடம், எல்லாவற்றையும்
கடந்த அவன் கருப்பையில் பத்துமாதம் வசிக்கிறான், மனதின் மூலம் நீரை அருந்துகிறான்,
பிராணன் மூலம் அமிர்தத்தினை அருந்துகிறான், ஓம் எனும் பிரணவத்தின் திசையில் பிறப்பு
நிகழுகிறது.
66. கோரக்கர்: அவன் எந்த சூன்யத்தில் பிறந்தான்?
அவனை எந்த சூன்யம் உறிஞ்ச்சிக்கொண்டது?
67. மச்சேந்திர நாதர்: அவன் சகஜ சூன்யத்தில் பிறந்தான், சத்குரு சாமீப சூன்யத்தில்
இருப்பதற்கு உபதேசித்தார், பின் அவன் பற்றற்ற நிலை எனும் அதித் சூன்யத்தினால் உறிஞ்சப்படுகிறான்.
பின் அவன் எல்லையற்ற பரம சூன்யத்தின் சாராம்சமாக இருந்து விளக்குகிறான்.
68. கோரக்கர்: ஒருவன்
எப்படி சமாதியினை அடைவது? எப்படி ஒருவன் தன்னை இடையூறு செய்யும் காரணிகளில் இருந்து
வெளியேறுவது? எப்படி ஒருவன் நான் காவது நிலையான தூரிய நிலையினை அடைதல்? எப்படி
ஒருவன் தந்து உடலை அழிவற்றதாகவும் மரணமற்றதாகவும் மாற்றுவது?
69. மச்சேந்திர நாதர்: இளம் பாலகன் சமாதியினை மனதினால் அடைகிறான், அதன் போது தனது
பிராணனால் இடையூறடைகிறான், தூரியமாகிய நாலவது நிலையினை சிரத்தையுடன் கூடிய ஞானத்தினால்
அடைகிறான். அழிவற்றது மரணமற்றதுமான நிலையினை குருவை பணிந்து, குருவுடன் இரண்டறக்கலப்பதன்
மூலம் அடைகிறான்
70. கோரக்கர்: யார்
உறங்குகிறார்? யார் விழிப்பாயிருக்கிறார்? யார் பத்து திசைகளிலும் செல்கிறார்? எங்கிருந்து
பிராணன் உதிக்கிறது? எப்படி சப்தம் தொண்டை, அண்ணம், உதடுகளின் மூலம் உருவாகிறது?
71. மச்சேந்திர நாதர்: மனது உறிஞ்சப்பட்டவர் உறங்குபவர், பிராணனும், உணர்வும்
விழிப்படைந்தவர் விழிப்பாயிருப்பவர். கற்பனை பத்து திசைகளிலும் செல்லும், பிராணன் நாபியிலிருந்து
உதிக்கின்றது, அதன் மூலம் உதடும் அண்ண, தொண்டை அசைவுகளால் சப்தம் உருவாகிறது.
72. கோரக்கர்: உணர்வு என்பது என்ன? எது சாராம்சம்? எது
உறக்கம்? எது மரணம்?எதை எழுப்புவதன் மூலம் ஒருவன் பஞ்சபூதங்களையும் சமப்படுத்தலாம்?
73. மச்சேந்திர நாதர்: ஜோதியாகிய ஒளியே உணர்வு, பயமற்று இருத்தலே விழிப்புணர்வின்
சாராம்சம், விழித்தல் பிறப்பு, உறங்குதல் மரணம், ஐந்து பூதங்களும் ஜோதியாகிய ஒளியில் உள்ளது.
74. கோரக்கர்: யார் பேசுவது? யார் உறங்குவது?எந்த நிலையில்
அவன் தன்னைத் தேடுவான்? அவன் எந்த நிலையில் எல்லாக்காலங்களிலும் நிலைத்திருக்கும் நிலையினைப்
பெறுவான்?
No comments:
Post a Comment