கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை - 06
பகுதி - 06
ஓம் ஸ்ரீ கோரக்க நாத ஸ்ரீ குரு பாதம் பூஜயாமி தர்ப்பயாமி நமஹ!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
46. கோரக்கர்: எப்போது
ரூபங்கள் எல்லாம் கரைந்து அரூபம் மட்டும் மிஞ்சும் போது, நீர்
வாயுவாகும் போது, சூரியனோ சந்திரனோ அற்றபோது, ஹம்ஸம் எங்கு இருக்கும்?
47. மச்சேந்திர நாதர்: இயற்கையான
ஹம்ஸம் ஒருவன் சூனியத்தை அறிந்தபின் அதில் இருக்கின்றது, ரூபங்கள் எல்லாம்
கரைந்து அரூபம் மட்டும் மிஞ்சும் போது ஆன்மா பரம் ஜோதியான ஒளியில்
கலக்கின்றது.
48. கோரக்கர்: எது அமூலத்திற்கு மூலமானது/ மூலம் எங்கே உள்ளது? யார் குருவின் இலட்சியம்?
49. மச்சேந்திர நாதர்: சூன்யமே அமூலத்திற்கு மூலமானது, மூலம் எங்கும் வியாபித்து பரம்பியுள்ளது, விடுதலையாகிய நிர்வாணமே குருவின் இலட்சியம்.
50. கோரக்கர்: எங்கிருந்து பிராணன் எழும்புகிறது? எங்கிருந்து மனம் வருகிறது? எப்படி பேச்சு உருவாகி கரைகிறது?
51. மச்சேந்திர நாதர்:
மனதின் பிறப்பு தோற்றமற்றது, பிராணன் மனதிலிருந்து உருவாகிறது, பேச்சு
பிராணனிலிருந்து உருவாகிறது, மீண்டும் பேச்சு மனதில் கரகிறது.
52. கோரக்கர்: எது தடாகம்? எது தாமரை? எப்படி நாம் காலத்தை வெல்லலாம், எப்படி கண்களுக்குதெரியாத, அடையமுடியாத உலகங்களை அடையலாம்?
53. மச்சேந்திர நாதர்: மனமே
தடாகம், ஆகாயமே தாமரை; ஊர்த்துவமுகமாய் மேலேற்றுபவர்கள் காலத்தை/ மரணத்தை
வெல்லலாம், கீழுள்ளதையும் மேலுள்ளதையும் அறிவதன் மூலம் அறியமுடியாததை
அறியலாம்.
54. கோரக்கர்: எது கடினமான வழி? எது இலகுவான வழி? எது
சங்கமம்? எந்த சக்கரத்தினூடாக (நரம்பு மையத்தினூடாக) சந்திரனை நிரந்திரமாக
தங்க வைக்க முடியும்? எப்படி உணர்வுள்ள மனம் பேரின்ப நிலையை அடைவது?
55. மச்சேந்திர நாதர்: தூய
வாயு மார்க்கம் கடினமான வழி, காப்பாற்றுபவரை (குருவை) சரணடைதல் இலகுவான
வழி! இவையிரணும் சங்கமமாவதற்குரிய இலகுவான வழி, சந்திரனை கட்டுப்படுத்த
சாகி சக்கரத்திற்கு மேல் அணையிடல் வேண்டும், விழிப்புணர்வே பேரின்பம்
அடைவதர்குரிய வழி!
56. கோரக்கர்: பிறப்பு எவ்வாறு வருகிறது? எப்போது முதல் உணர்வு வருகிறது? நான் எப்படி பிறந்தேன்?
No comments:
Post a Comment