Tuesday 21 February 2012

கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை - 05

கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை - 05



ஓம் ஸ்ரீ கோரக்க நாத ஸ்ரீ குரு பாதம் பூஜயாமி தர்ப்பயாமி நமஹ!

முக்கிய குறிப்பு: இந்த பதிவு மொழிபெயர்ப்பு மாத்திரம்தான், இதன் பொருள் மறைபொருளாக விளக்கப்பட்டுள்ளது,  படிப்பவர்கள் குருவருள் கொண்டு விளங்க முயற்சித்தால் பொருளறியலாம். இவற்றில் உள்ள விடயங்களை குண்டலினி யோகம், ஸ்ரீ சக்ர பூஜை விதிகளுடன் பொருந்திப்பார்த்து பயன்பெறலாம். ஆதலால் இது அனைவருக்குமான பதிவு அல்ல என்பதனையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு மாத்திரமே உரியது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
38. கோரக்கர்: சூரியனும் சந்திரனும் எங்கு வசிக்கும்?  சப்தத்தினதும் பிராணனினதும் மூல அடிப்படை எங்கே? எங்கே ஹம்ஸம் நீரருந்த அமரவேண்டும்? எந்த இடத்தில் மேலேறிய சக்தியை திரும்பவும் கொண்டுவந்து ஓய்வடைய செய்யவேண்டும்?

39. மச்சேந்திர நாதர்: சந்திரன் இருக்குமிடம் மேலே! சூரியன் இருக்குமிடம் கிழே, சப்தமும் பிராணணதும் அடிப்படை இதயத்தில், ஹம்ஸத்தை நீரருந்த சொர்க்கத்தில் நிறுத்த வேண்டும், மேலேறிய சக்தியை அது இருந்த இடத்திற்கே அதன் சொந்த இடத்திற்கு கொண்டு சென்று ஓய்வடைய செய்யவேண்டும். 

40. கோரக்கர்: எங்கிருந்து நாதம் உருவாகிறது? அது எங்கே சமப்படுகிறது? எப்படி அது நிலைத்திருக்கிறது? இறுதியாக எங்கே ஒடுங்குகிறது?

41. மச்சேந்திர நாதர்: நாதம்  சார்பில்லா பூரணத்திலிருந்து உருவாகிறது, சூன்யத்தில் சமப்படுகிறது, பிராணனை கட்டுப்படுத்துவதால் அதனை நிறுத்த முடியும், இறுதியாக உருவமற்ற பூரணத்தில் ஒடுங்குகிறது!

42. கோரக்கர்: நாதம் என்பது இல்லையென்றால் சக்தியென்பது இல்லை, சொர்க்கம் என்பது இல்லையெனில் எமக்கு எதிர்பார்ப்பை வரைய முடியாததாகிறது, நாதமும் பிந்துவும் இல்லையெனில் மனிதனிற்கு பிராணனும் எங்கே?

43. மச்சேந்திர நாதர்: நாதம் என்பது சப்தம், பிந்து என்பது அசைவு, சொர்க்கம் ஆசையை தூண்டுகிறது, ஆனால் எங்கு நாதமும் பிந்துவும் இல்லையோ அங்கு பிராணன் எங்கும் நிறைந்த பிராணனில் உறைகிறது.

44. கோரக்கர்: எப்போது ரூபங்கள் எல்லாம் கரைந்து அரூபம் மட்டும் மிஞ்சும் போது, நீர் வாயுவாகும் போது, சூரியனோ சந்திரனோ அற்றபோது, ஹம்ஸம் எங்கு இருக்கும்?

         45. மச்சேந்திர நாதர்: இயற்கையான ஹம்ஸம் ஒருவன் சூனியத்தை       அறிந்தபின் அதில் இருக்கின்றது, ரூபங்கள் எல்லாம் கரைந்து அரூபம் மட்டும் மிஞ்சும் போது ஆன்மா பரம் ஜோதியான ஒளியில் கலக்கின்றது.

No comments:

Post a Comment