Tuesday, 21 February 2012

கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை - 02

கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை - 02


பகுதி -01 பார்க்க இங்கே அழுத்தவும்.


பகுதி -02 

முக்கிய குறிப்பு: இந்த பதிவு மொழிபெயர்ப்பு மாத்திரம்தான், இதன் பொருள் மறைபொருளாக விளக்கப்பட்டுள்ளது, படிப்பவர்கள் குருவருள் கொண்டு விளங்க முயற்சித்தால் பொருளறியலாம். இவற்றில் உள்ள விடயங்களை குண்டலினி யோகம், ஸ்ரீ சக்ர பூஜை விதிகளுடன் பொருந்திப்பார்த்து பயன்பெறலாம். ஆதலால் இது அனைவருக்குமான பதிவு அல்ல என்பதனையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு மாத்திரமே உரியது.


ஓம் ஸ்ரீ கோரக்க நாத ஸ்ரீ குரு பாதம் பூஜயாமி தர்ப்பயாமி நமஹ!

இனி கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை

11.கோரக்கர்: எது விதை? எது விதைக்கப்படும் இடம்? எது நேரடியான கேள்வி? எது உண்மையான பார்வை? எது யோகம்? எது அதனை அடைவதற்கு யுக்தி? எது மோட்சம்? எது முக்தி?

12. மச்சேந்திர நாதர்: மந்திரமே விதை, பார்வை அல்லது மதியாகிய புத்தியே அதனை தாங்கும் கருப்பை அல்லது விதைக்கப்படும் இடம். சிரத்தையுடன் கூடிய அறிதல் நேரடியான கேள்வி, பாகுபடுத்தி எது நல்லது கெட்டது என அறியும் பார்வை உண்மையான பார்வையாகும். சமுத்திரமே யோகமாகும், அதையடையும் வழி பூமியாகும், ஒளியை அறிதல் விடுதலையாகிய மோட்சமாகும், ஒளியாகுதல் முக்தியாகும்.

13. கோரக்கர்: எது தண்டுகளற்ற மரமாகும்? அது சிறகுகள் அற்ற கிளியாகும்? எது கரைகளற்ற அணையாகும்? யார் இறப்பற்று இறப்பவர்?

14. மச்சேந்திர நாதர்: பிராணனே தண்டற்ற மரமாகும், மனமே சிறகுகளற்ற கிளியாகும், திடமான மாறாத்தன்மையே கரைகளற்ற அணையாகும். நித்திரையே மரணமற்ற மரணமாகும்.

15. கோரக்கர்: சந்திரனின் வீடு எது? சூரியன் எது? எந்த வீட்டில் காலம் இசை பாடும்?  எங்கு பஞ்ச பூதங்க்களும் சமப்படும்?

16. மச்சேந்திர நாதர்: மனமே சந்திரனின் வீடு, பிராணனே சூரியன், சூன்யத்தில் காலம் இசைபாடும், ஞானத்தினை அடையும் போது பஞ்ச பூதங்களும் சமப்படும்.

17. கோரக்கர்: எது விதை? எது விதைக்கப்படும் இடம்? எது நேரடியான கேள்வி? எது உண்மையான பார்வை? எது யோகம்? எது அதனை அடைவதற்கு யுக்தி? எது மோட்சம்? எது முக்தி?

18. மச்சேந்திர நாதர்: மந்திரமே விதை, பார்வை அல்லது மதியாகிய புத்தியே அதனை தாங்கும் கருப்பை அல்லது விதைக்கப்படும் இடம். சிரத்தையுடன் கூடிய அறிதல் நேரடியான கேள்வி, பாகுபடுத்தி எது நல்லது கெட்டது என அறியும் பார்வை உண்மையான பார்வையாகும். சமுத்திரமே யோகமாகும், அதையடையும் வழி பூமியாகும், ஒளியை அறிதல் விடுதலையாகிய மோட்சமாகும், ஒளியாகுதல் முக்தியாகும்.

19. கோரக்கர்: எது தண்டுகளற்ற மரமாகும்? அது சிறகுகள் அற்ற கிளியாகும்? எது கரைகளற்ற அணையாகும்? யார் இறப்பற்று இறப்பவர்?

20. மச்சேந்திர நாதர்: பிராணனே தண்டற்ற மரமாகும், மனமே சிறகுகளற்ற கிளியாகும், திடமான மாறாத்தன்மையே கரைகளற்ற அணையாகும். நித்திரையே மரணமற்ற மரணமாகும்.

No comments:

Post a Comment