மனித உடலில் பிராண ஓட்டம் (சீன பிராண சாத்திர அடிப்படையில்)
இதனுடன் தொடர்புடைய பிற பதிவுகள்
=========================================================================================
சீன பிராண சாத்திர அடிப்படையில் பிராண சக்தி உடலினுள் பாயும் பாதைகள் மெரிடியன்கள் எனப்படும், சித்தர்கள் இதனை நாடி என்பார்கள், எமது சித்தர்களின் கணக்குப்படி இந்த நாடிகள் 72000 ஆகும். சீன பிராண சாத்திரத்தின் படி பிரதான மெரிடியன்கள் 12 ஆகும், இவை குருதி சுற்றோட்டத்தொகுதி போன்றவை ஆனால் ஸ்தூல உடலில் இருப்பவை அல்ல. சூஷ்ம உடலில் காணப்படுபவை. ஒவ்வொரு மெரிடியனும் ஒவ்வொரு உள்ளுறுப்புடன் ஆரம்பித்து உடலின் மேற்பரப்பினூடாக பரவி உடலின் வெளிப்புறத்தில் முடிவுறுகின்றன. ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கொருமுறை ஒரு மெரிடியனில் பிராண சக்தி அதிகமாகவும் மற்றவற்றில் குறைவாகவும் காணப்படும்.
- பிராண சாத்திர விளக்கம் (சீன அடிப்படையில்)
- பிராண சக்தியின் தன்மைகள் - 01
- பிராண சக்தியின் தன்மைகள் - 02
- போதிதர்மரின் நோக்குவர்ம சித்தியும் இந்திய யோக இரகசியமும்
- நோக்குவர்மமும் தாரணா சக்தியும்:
- நோக்கு வர்மமும் பிராண சக்தியும் (நோக்கு வர்மத்தின் செயல்முறை இரகசியம்)
=========================================================================================
சீன பிராண சாத்திர அடிப்படையில் பிராண சக்தி உடலினுள் பாயும் பாதைகள் மெரிடியன்கள் எனப்படும், சித்தர்கள் இதனை நாடி என்பார்கள், எமது சித்தர்களின் கணக்குப்படி இந்த நாடிகள் 72000 ஆகும். சீன பிராண சாத்திரத்தின் படி பிரதான மெரிடியன்கள் 12 ஆகும், இவை குருதி சுற்றோட்டத்தொகுதி போன்றவை ஆனால் ஸ்தூல உடலில் இருப்பவை அல்ல. சூஷ்ம உடலில் காணப்படுபவை. ஒவ்வொரு மெரிடியனும் ஒவ்வொரு உள்ளுறுப்புடன் ஆரம்பித்து உடலின் மேற்பரப்பினூடாக பரவி உடலின் வெளிப்புறத்தில் முடிவுறுகின்றன. ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கொருமுறை ஒரு மெரிடியனில் பிராண சக்தி அதிகமாகவும் மற்றவற்றில் குறைவாகவும் காணப்படும்.
அதேவேளை இந்த பிராணசக்தியில் யிங் (Ying) யங் (Yang) என இரண்டு தன்மை உண்டு என முன்னர் பார்த்துள்ளோம். இந்த தன்மை ஒவ்வொரு நான்கு மணித்தியாலத்திற்கு ஒருமுறை இந்த மெரிடியன்களில் மாறும். இந்த சமநிலை ஒரு நாள் முழுவதும் சரியாக நடக்கும் போது உடல் ஆரோக்கியமாக காணப்படும். இந்த பிராண சக்தியின் மாற்றம் பற்றிய அறிவு போர்க்கலையில், டிம் மாக் எனப்படும் வர்ம சாஸ்திரத்தில் தாக்குவதற்கு தேவையானதாகும்.
இந்த பன்னிரெண்டு மெரிடியன்களைவிடவும் மேலும் எட்டு மெரிடியன்கள் உள்ளன அவை "அபூர்வ மெரிடியன்கள்" என அழைக்கப்படும். இவை கிட்டத்தட்ட ஒரு சேமிப்பு கிடங்கு போன்றவை. அதாவது பிரதான மெரிடியன்களில் பிராண சக்தி அதிகமாகும் போது இந்த அபுர்வ மெரிடியன்களினுள் செலுத்தப்படும். இந்த அபூர்வ மெரிடியன்களில் நான்கு யிங் தன்மையுடையவை, நான்கு யங் தன்மையுடையவை. இந்த மெரிடியன்களின் பிராண ஓட்ட சமநிலையே ஒரு மனிதனது மன, உணர்ச்சி சமநிலைகளை பாதிக்கின்றது என்பது சீன மருத்துவ, யோக, போர்க்கலை இரகசியமாகும்.
உடலில் உள்ள 12 மெரிடியன்களது பட விளக்கம் கீழே காட்டப்பட்டுள்ளது.
சீன வைத்திய சாஸ்திரமறிந்த வைத்தியர் நோயாளி ஒருவரை இந்த மெரிடியன்களில் பிராணனது ஓட்டம் அதிகமாகவா அல்லது குறைவாகவா உள்ளது என்பதனை அறிந்து அதனை குறைக்கவோ, கூட்டவோ மூலிகை ஊடாக அல்லது அக்யுபஞ்சர் ஊடாகம் சரி செய்வார்.
No comments:
Post a Comment