கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை பகுதி -08
----------------------------------------------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்
- கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை பகுதி -01
- கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை பகுதி -02
- கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை பகுதி -03
- கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை பகுதி -04
- கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை பகுதி -05
- கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை பகுதி -06
- கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை பகுதி -07
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஓம் ஸ்ரீ கோரக்க நாத ஸ்ரீ குரு பாதம் பூஜயாமி தர்ப்பயாமி நமஹ!
முக்கிய குறிப்பு: இந்த
பதிவு மொழிபெயர்ப்பு மாத்திரம்தான், இதன் பொருள் மறைபொருளாக
விளக்கப்பட்டுள்ளது, படிப்பவர்கள் குருவருள் கொண்டு விளங்க முயற்சித்தால்
பொருளறியலாம். இவற்றில் உள்ள விடயங்களை குண்டலினி யோகம், ஸ்ரீ சக்ர பூஜை
விதிகளுடன் பொருந்திப்பார்த்து பயன்பெறலாம். ஆதலால் இது அனைவருக்குமான
பதிவு அல்ல என்பதனையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த
மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு மாத்திரமே உரியது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------------------------
76. கோரக்கர்: மனம் எப்படி விருத்திகளை அடைகிறது? எப்படி
பிராணன் வந்து செல்கிறது? சந்திரன் எப்படி பிரவாகிக்கிறது? எப்படி
காலம் நித்திரைக்கு செல்கிறது?
76. மச்சேந்திர நாதர்: மனம்
இருதயத்தில் விருத்திகளைப் பெறுகிறது. பிராணன் நாபியிலிருந்து ஆரம்பித்து சென்று வருகிறது,
தன்னில் நிலைப்பதால் சந்திரபிரவாகம் ஏற்படும். அதுவாகவே ஆவதால் காலம் நித்திரைக்கு
செல்கிறது.
77. கோரக்கர்: எந்த சூன்யத்தில் ஒளி திருப்பமடையும்? எந்த
சூன்யத்தில் வாக்கு எழும்? எந்த சூன்யம் மூவுலகிற்கும் சாரமாகும்? எந்த சூன்யத்தினால்
ஒருவன் அனைத்தையும் கடப்பான்?
78. மச்சேந்திர நாதர்: ஆசை எனும் சூன்யம், பயமற்ற சூன்யம், சுய
சித்தி எனும் சூன்யம், பற்று அற்ற சூன்யம்.
79. கோரக்கர்:எங்கே பசி எழுகிறது? எங்கே உணவு?எங்கே நித்திரை உதிக்கிறது?
எங்கே மரணம்?
80. மச்சேந்திர நாதர்: ஆசைகளில்
இருந்து பசி எழுகிறது, பசியிலிருந்து உணவு வருகிறது, உணவிலிருந்து நித்திரை, நித்திரையிலிருந்து
,மரணம்!
81. கோரக்கர்: எந்த தாமரை உட் சுவாசிக்கும் போதும்
வெளி சுவாசிக்கும் போதும் ஹம்ஸத்தினை உண்டாக்குகிறது? எந்த தாமரையில் ஹம்ஸம் ஓய்வெடுக்கிறது?
எந்த தாமரையில் பூஜிக்க வேண்டும்? எந்த தாமரையில் காணமுடியாததை காணவேண்டும்?
82. மச்சேந்திர நாதர்: நாபிக்கமலத்தில்,
ஹிருதய கமலத்தில், நடுக்கமலத்தில், தாமரகளுக்கு அப்பால்!
83. கோரக்கர்: எது சத்தியம்? குரு நாதா தயை கூர்ந்து
கூறுவீர்களா? அதனை
அடைவதற்கு மனதையும் சுவாசத்தையும் என்ன நிலையில் வைத்திருக்க வேண்டும்? ஒருவன் சம்ஸார
ஸாகரத்தினை எப்படிக் கடப்பது?
84. மச்சேந்திர நாதர்: சாதாரண
பார்வையில் இருந்து ஆன்ம பார்வையாகிய திவ்ய திருஷ்டியினை அடைவது சத்தியம், ஆன்ம விடுதலைக்கான
ஞானத்தினை அடைவதை நோக்கி மனதை வைத்திருத்தல் வேண்டும், குருவும் சீடனும் ஒரே (சூஷ்ம)
உடலை உடையவர்கள், ஆன்ம விடிதலை அடைந்தால் பின்பு வருகையிம் போதலும் நடைபெறாது.
85. கோரக்கர்: எங்கிருந்து உட்சுவாசம் வெளிசுவாசம்
ஆரம்பிக்கிறது? எங்கே பரம ஹம்ஸம் வசிக்கிறது? எந்த இடத்தில் மனம் நிரந்தரமாக நிற்கும்?
86. மச்சேந்திர நாதர்: கீழிருந்து
ஆரம்பிக்கிறது, உச்சியில் பரம ஹம்ஸம் வசிக்கிறது, சஹஜ சூன்யத்தில் மனம் சமமாயிருக்கும்,
நிலைத்திருக்கிறது, சப்தத்தினை உணரும்போது மனம் நிலையடையும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு:
நேற்றைய பதிவின் தொடர்ச்சியான சீன பிராண சாத்திரத்தின் அடிப்படை, நாடிகளைப்பற்றியும் அதனூடான பிராணனின் ஓட்டத்தினையும் பற்றிய பதிவு 28/11/11 திங்கட்கிழமை பதியப்படும்.
https://www.youtube.com/watch?v=1C08vfiOSFo&t=30s&ab_channel=SARVASIDDHAR%27SSRIVAALAIJEEVAPEEDAM
ReplyDelete